ரூ.38.30 இலட்சம் செலவில் முடிவுற்ற 3 திட்டப் பணிகளை தூத்துக்குடி எம்.பி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 28 ஜூன், 2025

ரூ.38.30 இலட்சம் செலவில் முடிவுற்ற 3 திட்டப் பணிகளை தூத்துக்குடி எம்.பி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.


பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித்திட்டம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் ரூ.38.30 இலட்சம் செலவில் முடிவுற்ற 3 திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 3 ஊராட்சிகளில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் நிதித்திட்டம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் ரூ.38.30 இலட்சம் செலவில் முடிவுற்ற 3 திட்டப் பணிகளை மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத். இ.ஆப., தலைமையில் இன்று (28.06.2025) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் ஏழை எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, இன்றையதினம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்குப்பட்ட மேலவெள்ளமடம் ஊராட்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின் கீழ் ரூ.9.5 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை கட்டடத்தினையும், கீழ அம்பலசேரி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.19.30 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியினையும், 

மீரான்குளம் ஊராட்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.9.5 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை கட்டடம் என மொத்தம் ரூ.38.30 இலட்சம் செலவில் முடிவுற்ற 3 திட்டப் பணிகளை மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தலைமையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி செ.அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, வட்டாட்சியர்கள் பொன்னுலட்சுமி (சாத்தான்குளம்), திரு. செல்வகுமார் (ஏரல்), ஆழ்வார்திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, சிவராஜன், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad