தூத்துக்குடியில் விஜய் பிறந்தநாள் விழா 51 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம், குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 22 ஜூன், 2025

தூத்துக்குடியில் விஜய் பிறந்தநாள் விழா 51 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம், குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு.

தூத்துக்குடியில் விஜய் பிறந்தநாள் விழா 51 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம், குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு.

தமிழக வெற்றி கழக க் தலைவர் விஜய் 51வது பிறந்தநாள் முன்னிட்டு 51கிலோ பிரம்மாண்டமான கேக்கை வெட்டி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் அணிவித்தார்.

தமிழக வெற்றி கழக க்தலைவர் விஜய் 51வது பிறந்த நாள் விழா தூத்துக்குடி மாவட்ட முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது -இதை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில். 
 தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவிக்கப்பட்டது

தொடர்ந்து, பிரசவ வார்டில் உள்ள பெண்களுக்கு போர்வை மற்றும் பழங்களை வழங்கி, அரசு மருத்துவமனை முன்பு உள்ள ஆதரவற்றவர்களுக்கு காலை உணவினை வழங்கினார்.
 
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகே வசிக்கும் நரிக்குறவர் இன மக்களோடு சேர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிறந்த நாள் விழாவை கேக் வெட்டி கொண்டாடினர். இதனை தொடர்ந்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் வழங்கினார்.

பின்னர் தூத்துக்குடி கிளியோபட்ரா தியேட்டரில் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது அப்போது படத்தின் இடைவேளையின் போது தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் பட்டாசுகள் வெடித்து 51கிலோ பிரம்மாண்டமான கேக் வெட்டி கொண்டாடப்பட்டது படம் பார்க்க வந்திருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டனர்

அதன்பின் தூத்துக்குடி உள்ள சங்கரா அன்பு ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான பலசரக்கு சாமான்கள் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் வழங்கினார் அதன்பின் தூத்துக்குடியில் உள்ள அனாதை ஆசிரமங்களில் தங்கி படிக்கும்300 குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன மேலும் பல ஆசிரமங்களில் தங்கி இருக்கும் முதியோர்களுக்கு மதிய உணவுகளை மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad