545 ஆசிரியர்களுக்கு பணி நிறைவு மற்றும் சாதனையாளர் விருது வழங்கி அ.மாயவன் பாராட்டு!
வேலூர் , ஜூன் 2 -
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் 545 ஆசிரியர்களுக்கு பணி நிறைவு மற்றும் சாதனையாளர் விருது வழங்கி அ.மாயவன் பாராட்டு
திருவள்ளளூர் மாவட்ட ஆட்சியரின் பேச்சுக்கு கண்டனம்
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் பணி நிறைவு பாராட்டு மற்றும் சாதனையாளர் விருது வழங்கும் விழா இன்று காலை அரப் பாக்கம் அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எம்.எஸ்.செல்வகுமார் தலைமை தாங்கி வரவேற்றுப் பேசினார் தலைமை நிலைய செயலாளர் நிகழ்ச்சிகளை தொகுப்புரை ஆற்றினார்.
பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கும் நூறு சதவீதம் தேர்ச்சி விழுக்காடு காட்டிய பட்டதாரி ஆசிரியர்களுக்கும் சங்கத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் அ.மாயவன் விருதுகளை வழங்கி பாராட்டி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது..
வேலூர் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தாங்கள் கற்பிக்கும் பாடத்தில் 100 சதவிகிதம் தேர்ச்சி விழுக்காட்டினை வழங்கி இருக்கிறார்கள் மகிழ்ச்சியாக உள்ளது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் அன்மையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பிரதாப், இ.ஆ.ப. அவர்களின் பேச்சு வன்மையாக கண்டிக்க தக்கது. தேர்ச்சி விழுக்காடு அதிகரித்தால் அது தனது முயற்சியால் பெறப்பட்டது என்று உரிமை கொண் டாடும் இதே ஆட்சியர் தேர்ச்சி குறைந் தாலும் அவர் தான் காரணம் என்பதை மறந்து பேசுகிறார். தேர்ச்சி குறைந்த காரணத்தினால் ஒரு ஆசிரியர் பணி செய்யவே தகுதியற்றவர் என்றும் இடைநீக்கம் செய்யவேண்டுமெனவும் ஒருமையில் பேசியும் கண்ணிய குறைவாக பொது வெளியில் பேசிய செயலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநரிடம் நேரில் சந்தித்து முறையிட்டுள்ளோம் என்றார்.
அன்னை மிரா கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் எஸ்.ராமதாஸ் கல்லூரியின் செயலாளர் ஜி.தாமோ தரன், சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.ஜெயக்குமார் மாநில பொருளாளர் ம.விஜயசாரதி, மாநில ஆலோசகர் சு.பக்தவச்சலம், ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் பி.தாண்டவராயன் ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் மாநில உயர்மட்ட குழு உறுப்பினரும் தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.மாவட்ட செயலாளர் கே.தனசேகர், மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் ஆர்.நிர்மலா, எம்.யசோதா, மாவட்ட துணைத் தலைவர் கள் பி.ஞானசேகரன், வி.பார்த்திபன், மாவட்ட இணைச்செயலாளர்கள் டி.கிருஷ்ணன், பி.அஜய்கோஷ்குமார், எம்.ஜி.சங்கர், மாவட்ட சட்ட செயலாளர் எஸ்.திவ்யபிரபு, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சி.சிவக்குமார், ஆர்.இந்திராகாந்தி, வி.எஸ்.சத்யா, ஆர்.முத்துக்குமரன், வி.எம்.ராஜா, எஸ்.கெஜராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் ஏ.திருஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
பணிநிறைவு பெற்றதற்காக வாழ்த்துரை வழங்கிய தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனனுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.விழாவில் வேலூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற 39 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 100% தேர்ச்சி விழுக்காடு காட்டிய 506 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.முடிவில் மாவட்ட பொருளாளர் என்.இராஜ்குமார் நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக