கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு கிராமத்தில் எழுந்து அருள் பாலித்து வரும்
ஸ்ரீ மகா பட்டு மாரியம்மனுக்கு வைகாசி மாதம் காப்பு அணுவிக்கப்பட்டு 10 நாள் உற்ச்சவ திருவிழா ஆனது சிறப்பாக நடைபெற்று வந்தன மேலும் இறுதி நாள் இன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது
மேலும் கோயில் நிர்வாக நாட்டாமைக்காரர்கள் மனோகரன் சங்கர் புஷ்பராஜ் கிராம மக்கள் மற்றும் பக்த கோடிகள் மீது இறுதியாக மஞ்சள் நீர் தெளித்தனர் பிறகு வான வேடிக்கை நடைபெற்று பம்பை மேளம் வாசிக்க சகடையில் இருந்து அம்மன் இறங்கி ஆடிய உடன் சுற்றி வந்து ஊஞ்சலில் இறக்கப்பட்டது பிறகு தாலாட்டு நிகழ்வு நடைபெற்று
உற்ச்சாகமாக பெண்கள் அனைவரும் கும்மியடித்தனர் இதில் 500க்கும் மேற்பட்ட பக்த கோடிகள் சுவாமி தரிசனம் செய்தனர் அதன் பிறகு காப்புகள் அவுக்கப்பட்டு பழைய கொள்ளிடம் ஆற்றில் விடப்பட்டன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக