சேத்தியாத்தோப்பு அருகே பைபாஸ் சாலையில் விவசாயி வாகனம் மோதி உடல் நசுங்கி உயிரிழப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 2 ஜூன், 2025

சேத்தியாத்தோப்பு அருகே பைபாஸ் சாலையில் விவசாயி வாகனம் மோதி உடல் நசுங்கி உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே ஆனைவாரி கிராமப் பகுதியில் நான்கு வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அதிக விபத்துக்கள் ஏற்பட்டு வரும் பகுதியாகவும், இதுவரை 9 விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சேத்தியாத்தோப்பு மேட்டுத் தெருவை சேர்ந்த ராமலிங்கம் (70) என்பவர் தனது வயலுக்கு சைக்கிளில் சென்றபோது எதிர்பாராமல் சாலையில் சென்ற வாகனம் மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இந்த பகுதியில் உயர்மட்ட பாலம் அமைத்துத் தர வேண்டும் என தொடர்ந்து இப்பகுதியினர் போராடிவரும் நிலையிலும் நான்கு வழி சாலைப் பணிகளை மேற்கொண்டு வரும் நெடுஞ்சாலைத் துறையினர் அது குறித்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர். இன்னமும் பயன்பாட்டுக்கு வராத இந்த சாலையில் தற்போது அதிக அளவில் வாகனங்கள் அதிவேகத்தில் சென்று கொண்டுள்ளன. அதிக வேகமாகச் செல்வதால் விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. அதனால் இப்பகுதி கிராம மக்களும் வாகன ஓட்டிகளும் தெரிவிக்கும் போது இந்த இடத்தில் உயர்மட்ட பாலம் மற்றும் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad