காரமடையில் நடுப்புற டிவைடரில் கார் மோதி 2 பேர் பலி ..
கோவை ராமநாதபுரம் ஓலம்பஸ் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 42), மோகன்( 40 )மதன்குமார் (41 )தினேஷ்குமார் (38) மாணிக்கம் (36 )ஆகிய 5 பேரும் ஆட்டோ டிரைவர்கள்ஆவர்.இன்று அதிகாலை இராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியில் இருந்து கார் மூலம் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றனர். காரமடை வழியே சென்ற வாகனம் போது வாகன டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மேட்டுப்பாளையம் சாலையில் நடுப்புற தடுப்புகளில் மோதியது. இதில் அந்த காரில் வந்த 5 பேருக்கும் காயம் ஏற்பட்டது. மேலும் கிருஷ்ணமூர்த்தி மதன்குமார் ஆகியோர் ரெண்டு பேரும் சம்பவ இடத்தில்பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசாய் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக