சேத்தியாத்தோப்பு- ஜூன்02
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் இயங்கிவரும் ரியா நாட்டியாலயா நாட்டியப் பள்ளியின் பரதநாட்டிய மாணவர்கள் சலங்கை அணியும் விழா சேத்தியாத்தோப்புகேபிடி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இந்த விழாவில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர்அருண்மொழித்தேவன் சிறப்பு அழைப்பாளராகபங்கேற்றார். பரதநாட்டிய மாணவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட அருண்மொழிதேவன் மாணவர்கள், பார்வையாளர்களிடையே பாரதத்தின் பழம்பெரும் கலையானபரதநாட்டிய கலையின் சிறப்புகளை எடுத்துரைத்து உரையாற்றினார். பின்னர் சலங்கை அணியும் விழாவில் பங்கேற்று தங்களுடைய நாட்டியத்திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு வெற்றிப் பதக்கங்களை வழங்கி, வாழ்த்தி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுகமாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் கே. பி.டி. இளஞ்செழியன், நகரச்செயலாளர் எஸ்.ஆர். மணிகண்டன், மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளர் கமலக்கண்ணன், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் அருளழகன், கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளார் விநாயக மூர்த்தி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இதில் நாட்டிய மாணவர்களுடன் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், பார்வையாளர்கள் என அரங்கம் நிறைய பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக