திருப்பூர் மாவட்ட அளவிலான மாதாந்திர விவசாயிகள் குறைத்தீர்ப்பு கூட்டம் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் ஐ ஏ எஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது அப்போது திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவ தலைவர் சமூக ஆர்வலராகிய ஈ.பி.அ.சரவணன் மனு அளித்தார்.
அதில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 2 வது மண்டலம், 7 வது வார்டு பகுதியிலுள்ள சக்தி நகர் கிழக்கு ஜே வி டேப் சாலையிலுள்ள அன்னம்மார் கோவில் கிழக்கு பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
காற்றில் இந்த புகை கலப்பதால் சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருக்கும் குழந்தைகள், முதியவர்கள் மூச்சு திணறலால் பெரிதும் அவதிப்படுகின்றனர். வீடுகளில் காயவைக்கப்படும் துணிகள், உணவு பொருட்களிலும் புகையின் சாம்பல் படிகிறது.
இதனால் துணிகளை வெளியே காயவைக்க முடிவதில்லை. வீட்டின் மாடிகளில் காய வைக்கப்படும் உணவு பொருட்களிலும் இந்த புகை படிவதால் உணவு பொருட்கள் வீணாகிறது.
குடிநீர் தொட்டிகளில் புகை படிந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. தொடர்ந்து தினமும் இந்த புகை கலந்த காற்றை சுவாசிப்பதால் பொதுமக்கள் பல்வேறு உடல் ரீதியான பாதிப்புகளுக்குள்ளாகின்றனர்.
இந்த தொழிற்சாலையில் இருந்து புகையுடன் காற்றில் அடிக்கடி துகள்கள் வெளியேறி பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறுகள் மற்றும் கருப்பு புகை மற்றும் கருப்பு துகள்கள் இந்த பகுதிகளில் காற்றின் மூலம் படிவதால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் உண்டாகிறது.
எனவே தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேரும் புகையை கட்டுபடுத்தவும், பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையிலும் உடனடியாக இதை கண்காணித்து, தடுக்க தீவிர நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் விரைவாக உரிய தீர்வுகாண வேண்டுமென திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் சார்பாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக