ஈரோடு முனிசிபல் காலனியில் யுனிக்யூ எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனமும், நசியனூர் சாலையில் ஈஸ்ட் வேலி அக்ரோ பார்ம்ஸ் என்ற நிறுவனமும் 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக ஈரோடு இடையன்காட்டு வலசு சின்னமுத்து முதல் வீதியை சேர்ந்த சண்முகம் மகன் நவீன்குமார் (38) செயல்பட்டு வந்தார்.
இந்நிறுவனங்களில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 2 தவணையாக ரூ. 9 ஆயிரம் வீதம் ஒரு மாதத்துக்கு ரூ. 18 ஆயிரம் என கணக்கிட்டு ஒரு ஆண்டுக்கு ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் திரும்ப வழங்குவதாகவும், ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால், 10 மாதங்களில் ரூ. 7 லட்சத்து 50 ஆயிரமும், ரூ. 10 லட்சம் முதலீடு செய்தால் ஒரே தவணையாக 18 மாதங்களில் ரூ. 15 லட்சமும், ரூ. 25 லட்சம் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 4 தவணையாக ரூ.83 லட்சம் திரும்பி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதனை உண்மையென நம்பி முன்னாள் ராணுவத்தினர், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பணத்தை முதலீடு செய்தனர். மக்களிடம் நம்பிக்கை பெறும் விதமாக முதல் 2 தவணைகள் மட்டும் பணத்தை வழங்கிய நிறுவனத்தினர், பின்னர் சில மாதங்களாக வட்டியும், அசல் தொகையையும் திரும்ப வழங்கவில்லை.
தமிழக குரல் இணையதள செய்தியாளர்
ம.சந்தானம்
ஈரோடு மாவட்டம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக