காவல்துறை விசாரணைக்கு அழைத்த சம்பவத்தை தொடர்ந்து புரட்சி பாரதம் கட்சியினர் சாலை மறியல் 70 பேர் கைது! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 ஜூன், 2025

காவல்துறை விசாரணைக்கு அழைத்த சம்பவத்தை தொடர்ந்து புரட்சி பாரதம் கட்சியினர் சாலை மறியல் 70 பேர் கைது!

காவல்துறை விசாரணைக்கு அழைத்த சம்பவத்தை தொடர்ந்து புரட்சி பாரதம் கட்சியினர் சாலை மறியல் 70 பேர் கைது!
குடியாத்தம் , ஜூன் 14 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேரு ந்து நிலையம் எதிரே மறியலில் ஈடுபட்ட
புரட்சி பாரதம் கட்சியினர்.குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே சனிக் கிழமை இன்று சாலை மறியலில்  ஈடு பட்ட புரட்சி பாரதம் கட்சியினர் 70- பேரை
போலீஸார் கைது செய்தனர். புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி. குப்பம் எம் எல் ஏ வுமான எம்.ஜெகன் மூர்த்தி யை  ஒரு வழக்கு தொடர்பாக திருவள்ளூர் போலீஸார் விசாரணைக்கு அழைத்ததாக தகவல் பரவியதையடுத்து குடியாத்தத்தில் அந்த கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.போராட்டத்துக்கு புரட்சிபாரதம் கட்சியின் மாவட்டச் செய லர்  பி.மேகநாதன் தலைமை வகித்தார். மறியலில் ஈடுபட்ட கட்சியின் கொள்கை பரப்புச் செயலர் மு.ஆ.சத்யனார், மாவட்ட  பொருளாளர் குட்டிவெங்கடேசன், இளை ஞரணிச் செயலர் நந்தகுமார், நிர்வாகி கள் ஆனந்தராஜ், கோகுல்,நெப்போ லியன்,பி.கே.முருகேசன், ரமேஷ், கங்கா தரன் உள்ளிட்ட 70- பேரை நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமை யிலான போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். பின்னர் அனைவரும் விடுவித்தனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad