குந்தா கோத்தகிரி பகுதியில் பழங்குடியினருக்கான சிறப்பு முகாம்.
நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா பிக்கட்டி அருகே உள்ள குந்தா கோத்தகிரி பகுதியில் தொல்குடி திட்டத்தின் கீழ் பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது . இதில் இ சேவை ஆதார் சேவை மருத்துவ சேவை என அனைத்தும் ஓரிடத்தில் வழங்கப்பட்டது. இதில் இந்த பகுதியை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கோத்தர் இன பழங்குடியினர் பயன்பெற்றனர். இந்த முகாமில் குந்தா வட்டாட்சியர் திருமதி. சுமதி அவர்களும் இத்தலார் உள்வட்ட வருவாய் ஆய்வாளர் திரு.செங்கோடன் அவர்களும் கிராம நிர்வாக அலுவலர் திரு. ராஜன் அவர்களும் ஊர் தலைவர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக