மாதாந்திர மின் நுகர்வோர் குறைத்தீர்ப்பு கூட்டத்தை மின் நுகர்வோர்களையும், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளையும் முறையாக அழைத்து முறையாக நடைபெறுவதை உறுதிசெய்ய சமூக ஆர்வலராகிய ஈ.பி.அ.சரவணன் வலியுறுத்தல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 ஜூன், 2025

மாதாந்திர மின் நுகர்வோர் குறைத்தீர்ப்பு கூட்டத்தை மின் நுகர்வோர்களையும், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளையும் முறையாக அழைத்து முறையாக நடைபெறுவதை உறுதிசெய்ய சமூக ஆர்வலராகிய ஈ.பி.அ.சரவணன் வலியுறுத்தல்.



மாதாந்திர மின் நுகர்வோர் குறைத்தீர்ப்பு கூட்டத்தை மின் நுகர்வோர்களையும், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளையும் முறையாக அழைத்து முறையாக நடைபெறுவதை உறுதிசெய்ய சமூக ஆர்வலராகிய ஈ.பி.அ.சரவணன் வலியுறுத்தல்.


பெயரளவில் மட்டுமே நடக்கும் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்..


இந்த நாட்டில் பிறந்த அனைவரும் தவறை தட்டி கேட்கலாம் மின்வாரிய மோசடிகள் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கேட்கக்கூடாது என்பது கேள்விக்குறியாகயுள்ளது.


முறைகேடுகளில் ஈடுபடுகின்ற மின்வாரிய அலுவலர்களுக்கு சாதகமாக செயல்பட்டு மின் வாரிய முறைகேடுகள் தொடர்பாக தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் சமூக ஆர்வலர்கள் புகாரளிக்கக்கூடாது என்ற  ஏட்டில் இல்லாததை திருப்பூர் மின்வாரியம் கைவிட வேண்டும்.


மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் து.கிருஸ்துராஜ் ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத்தலைவர் ஈ.பி.அ.சரவணன் அளித்துள்ள மனு விவரம்:


திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் கோட்ட அளவிலான மாதாந்திர மின் நுகர்வோர் குறைத்தீர்ப்பு கூட்டத்தை பெயரளவில் மட்டுமே நடப்பதால் குறைகளுக்கு எந்த தீர்வும் எடுக்கப்படுவதில்லை முறையாக  

குறைத்தீர்ப்பு கூட்டத்திற்கு மின் நுகர்வோர்களையும், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளையும் முறையாக அழைத்து கோட்டத்திற்குட்பட்ட அனைத்து, டி இ, ஏடி, ஏஇ உள்ளிட்ட அலுவலர்களை முழுமையாக கலந்து கொண்டு மேற்பார்வை பொறியாளார் தலைமையில் நடத்துவதை உறுதிசெய்ய வேண்டும்.


திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் 

கோட்ட அளவிலான மாதாந்திர மின் நுகர்வோர் குறைத்தீர்ப்பு கூட்டத்தை பெயரளவில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன.


குறிப்பாக மின்வாரிய விதிகளின் படி அந்தந்த கோட்ட பகுதிகளிலுள்ள அனைத்து மின் நுகர்வோர்களுக்கும், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுக்கும் தகவல் தெரிவித்து வெளிப்படையாக குறைத்தீர்ப்பு கூட்டத்தை நடத்த வேண்டும்.


ஆனால் திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் தொடர்ச்சியாக முறைகேடுகள் மோசடிகள் நடைபெற்று வருகின்றது தொடர்பாக நுகர்வோர் அமைப்புகளை சேர்ந்த சமூக ஆர்வலராகிய நாங்கள் உரிய ஆதாரங்களுடன் புகாரளித்து வருவதால் தவறுகள் செய்தவர்கள் தொடர்ச்சியாக சஸ்பென்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகின்றன.


இதன் காரணமாக முறைகேடுகள் மோசடிகளில் ஈடுபடுகின்ற மின்வாரிய அலுவலர்கள் அவர்கள் செய்த தவறை மூடி மறைக்க சதி திட்டம் தீட்டி முறைகேடுகள் மோசடிகள் தொடர்பாக மின் நுகர்வோர் மட்டுமே புகாரளிக்க வேண்டுமெனவும் எதுவுமே தெரியாத மின் நுகர்வோர்கள் புகாரளித்தால் நாங்கள் ஈசியாக குற்றத்திலிருந்து தப்பித்து விடுவோம்.


ஆனால் நுகர்வோர் அமைப்புகளை சேர்ந்த சமூக ஆர்வலராகிய நாங்கள் உரிய ஆதாரங்களுடன் புகாரளித்தால் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு விசாரணைக்கு நேரிடையாக ஆஜராகி முறைகேடுகள் மோசடிகளை முற்றிலுமாக அம்பலப்படுத்தி தவறுகள் செய்த அலுவலருக்கு தண்டனையை உறுதிசெய்து வருகின்றதால்.


அதை சட்டவிரோதமாக தடுக்கு மின்வாரிய விதிக்கு முரணாக மாதாந்திர மின் நுகர்வோர் கூட்டத்தில் மின்வாரிய அலுவலர்கள் முறைகேடுகள் மோசடிகள் செய்து வருகின்றது தொட‌ர்பாக நுகர்வோர் அமைப்புகளை சேர்ந்த சமூக ஆர்வலராகிய நாங்கள் எவ்வித புகாரும் அளிக்கக்கூடாது என்றும் சட்ட நுணுக்கங்கள் சரியாக தெரியாத அப்பாவி பாமர நடுத்தர பொது மக்கள் மட்டுமே புகாரளிக்க வேண்டுமென்பது முற்றிலுமாக சட்டவிரோத செயலாகும்.


எனவே மின்வாரிய விதிகளின் கட்டாயமாக அந்தந்த கோட்ட பகுதிகளிலுள்ள அனைத்து மின் நுகர்வோர்களுக்கும், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுக்கும் தகவல் தெரிவித்தும்  அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் எந்தெந்த தேதி கிழமைகளில் எந்தெந்த கோட்ட அலுவலகங்களில் குறைத்தீர்ப்பு கூட்டங்கள் நடைபெறுகின்றது என்ற விபரங்களை முழுமையாக பட்டியலிட்டு பிளக்ஸ் பேனர் வைத்து வெளிப்படையாக குறைத்தீர்ப்பு கூட்டத்தை நடத்த வேண்டுமென  திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad