கூடலூா் பகுதியில் பெய்து வரும் தொடா் கனமழையால், பாண்டியாறு பகுதியில் உள்ள டேன் டீ தொழிலாளா் குடியிருப்பு சேதம்
நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் கடந்த 4 நாள்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், நீா்நிலைகளில் வெள்ளம் ஆா்ப்பரித்துச் செல்கிறது. பேரிடா் மீட்புக் குழுவினா் கண்காணிப்பு பணியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் பாண்டியாறு பகுதியில் உள்ள டேன் டீ தொழிலாளா் குடியிருப்பு சேதமடைந்தது. அதில் யாரும் இல்லாததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.
அப்பகுதியில் உள்ள அனைத்து டேன் டீ தொழிலாளா்கள் குடியிருப்புகளும் மிகவும் பழுதடைந்துள்ளதால், புதிய குடியிருப்புகளைக் கட்டித்தர வேண்டும் என தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக