உலக இரத்த கொடையாளர் தினம் - இரத்ததானம் செய்தோருக்கு பாராட்டு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 20 ஜூன், 2025

உலக இரத்த கொடையாளர் தினம் - இரத்ததானம் செய்தோருக்கு பாராட்டு!

உலக இரத்த கொடையாளர் தினம் - இரத்ததானம் செய்தோருக்கு பாராட்டு!
வேலூர் , ஜூன் 20 -

வேலூர் மாவட்டம் உலக ரத்த தானம் செய்தோர் தினம் முன்னிட்டு வேலூர் அடுக்கம்பாறையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் காட்பாடி வட்ட ரெட்கிராஸ்சங்கத்துடன்இணைந்து  கல்லூரியில் ரத்ததானம் செய்தவர்களை பாராட்டும் விழா நடைபெற்றது.நிகழ்ச்சி க்கு கல்லூரியின் தலைவர் என்.ரமேஷ் மற்றும் துணைத் தலைவர் என்.ஜனார்த்த னன் ஆகியோர் தலைமை தாங்கினர்.  முன்னதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் எம்.ஞானசேகரன் வரவேற்று பேசினார்.இந்தியன் ரெட் கிராஸ் சங்கத் தின் காட்பாடி வட்டக் கிளையின் அவைத் தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்த னன் சான்றிதழ்களை வழங்கிப் பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது உலக ரத்த தானம் செய்பவர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ஆம் அன்று கொண்டாடப்படுகின்றது ரத்தம் எந்த வகையை சார்ந்தது என்பதை கண்டு பிடித்த கார்ல் லென்ஸ் டெய்னரின் பிறந்தநாள் ஜூன் 14. அவர்  நோபல் பரிசு பெற்றவர் அவரின் பிறந்தநாளே உலக அளவில் ரத்ததானம் செய்தோர் தினமாக கொண்டாடப்படுகிறது. 
இந்த ஆண்டிற்கான கருப்பொருள் ரத்தத்தை கொடுங்கள் நம்பிக்கையை கொடுங்கள் ஒன்று கூடி உயிர்களை காப்பாற்றுவோம் என்பதாகும்.  இன்று இந்த கல்லூரியில் உள்ள முதல்வர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து நூற்றுக்கணக்கானோருக்கு ரத்த தானம் செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது ரெட் கிராஸ் சங்கம் எப் பொழுதெல்லாம் வேண்டுகோள் வைக் கிறதோ அப்பொழுதெல்லாம் மனமு வந்து ரத்ததானம் செய்து பல உயிர்களை காப்பாற்றி இருப்பது பாராட்டுக்குரிய செயலாகும் அந்த வகையில் அற்புதமாக ரத்ததானம் செய்த இந்த கல்லூரி தலைவர் துணைத் தலைவர் முதல்வர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் அவர்க ளோடு இணைந்து மாணவர்கள் ரத்த தானம் செய்துள்ளனர் அனைவருக்கும் ரெட் கிராஸ் சங்கத்தின் சார்பாக பாராட்டு க்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.மேலாண்மை குழு உறுப்பினரும் யூத் ரெட் கிராஸ் குழுவின் தலைவரு மான எஸ்.ரமேஷ் குமார் ஜெயின் வேலூர் கிங்ஸ் ஜேசிஐ தலைவர் சீனிவாசன், ஆர்ட் ஆப் லிவ்ங் இயக்கத்தின் ஒருங்கி ணைப்பாளர் முனைவர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்.நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் எம்.ஞானசேகரன், ஆசிரியர்கள் இயற்பியல் துறை எ.குமரே சன்  வி.விஜய், எம்.மதிவாணன், இ.சிவ பாலாஜி, மாணவர்கள் எ.அரவிந்த், ஜி.தினேஸ்குமார், எஸ்.தினகரன், எம். மதன், எம்.அசோக் மற்றும் ஆர்.கிஷோர் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
 
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad