வி.ஜி.எம் அறக்கட்டளை மற்றும் கரூர் வைசியா வங்கி இணைந்து அதிநவீன ரத்த வங்கியை கலெக்டர் துவக்கி வைத்தார் ..
கோவையின் சுகாதார பாதுகாப்பு கட்டமைப்பு வலுப்படுத்தும் வகையில் கரூர் வைஸ்யா வங்கி மற்றும் வி ஜி எம் அறக்கட்டளை இணைந்து கோவை திருச்சி சாலையில் உள்ள வி ஜி எம் மருத்துவமனையில் ,இரத்த வங்கியை துவக்கியது ,இதனை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் கரூர் வைசியா வங்கி நிர்வாக இயக்குனரும்,தலைமை நிர்வாக அதிகாரியுமான ரமேஷ்பாபு ஆகியோர், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 8.93 லட்சம் யூனிட்டுகள் ரத்தங்கள் சேகரிக்கப்படுகின்றது. கோவையில் மட்டும் 750 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் 5000 க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் உள்ளனர். அவசர நிலைகள் அதிர்ச்சி சம்பவங்கள் மற்றும் அரிதான இரத்த வகைகளுக்கான நிலையை பற்றாக்குறை இப்பகுதியில் காணப்படுகிறது. இந்த புதிய ரத்த வங்கி செயல்படுகிறது என்றனர். 1,800 சதுர அடி பரப்பளவிலான இந்த ரத்த வங்கியில், 1000 யூனிட் ரத்தங்கள் சேகரித்து வைக்க முடியும் என்றனர் ..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக