அரசு அலுவலகத்தில் பெண்களுக்கான மார்பகம் மற்றும் வாய் புற்றுநோய் கண்டறிதல் சிறப்பு மருத்துவ முகாம் !
வேலூர் , ஜூன் 12 -
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, பி டி ஓ அலுவலகத்தில்,பெண்களுக்கான மார்பகம் மற்றும் வாய் புற்றுநோய் கண்டறிதல் ஆகிய பொது மருத்துவம் உட்பட சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவின் பேரில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூம்பூவை மற்றும் வின்சென்ட் ரமேஷ் பாபு தலை மையிலும், வேலூர் நகர மன்ற தலைவர் அமுதா ஞானசேகரன் ஆகியோர் முன்னி லையில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார துறை சார்பில் தலைமை மருத்துவர் கார்த்திகேயன், பல் மருத்துவர். கலைச் செல்வன், மரு. இரா.பூஜா, பெண்களுக் கான மார்பகம் வாய் புற்றுநோய் அறிகுறி கண்டறிதல் மற்றும் பொது மருத்துவம் போன்றவற்றை இந்த சிறப்பு மருத்துவ முகாமில் மருத்துவம் பார்க்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு பணியாளர்கள் கலந்து கொண்டு இந்த சிறப்பு மருத்துவ முகாமை முறையாக பயன்படுத்தி கொண்டனர். இதில் பி.எச்.எஸ். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜி.ரவி, பல் மருத்துவ உதவியாளர் இனியன், செவிலியர்கள் வெண்மதி கல்பனா திவ்யா சுதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக