அரசு இயந்திரத்தின் அலட்சியத்தால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது
பவர் ஹவுஸ் 6 இல் இருந்து 22 கிலோ வாட் மின் இணைப்பு மின் கம்பத்தின் வழியாக மின்சாரம் பார்சன் வேலி பம்ப் ஹவுஸிற்கு சென்று கொண்டிருக்கிறது இதன் உதவியிலேயே ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீரும் கொடுக்கப்படுகிறது
ஆனால் இங்கு அடிக்கடி காற்றுடன் மழை பெய்வதால் மரங்கள் சாய்வதாலும் மின்சாரம் அவ்வப்போது தடை படுகிறது இதனால் பொதுமக்களுக்கு மின் இணைப்பும் தடை படுகிறது அதனால் குடிநீர் பற்றாக்குறையும் வருகிறது
அதனால் மக்களின் வரிப்பணத்தின் மூலம் அரசாங்கத்தின் சிறப்பு திட்டமாக கேபிள் டிரம் புதைவிட கேபிள் வழியாக மின்னிணைப்பு கொடுத்தால் இந்த மின் இணைப்பு தடைபடாது மற்றும் மக்களின் குடிநீர் தேவையும் பற்றாக்குறை வராது என்ற நல்லெண்ணத்தோடு அரசாங்கம் இந்த திட்டத்தை கொண்டு வந்தது
அதற்கு தகுந்தார் போல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தால் கேபிள் ட்ரம்களும் இறக்கி வைக்கப்பட்டது ஆனால் அதனால் எந்தவித உபயோகமும் இல்லை
இன்று அந்த கேபிள் ட்ரம்கள் முற்செடிகளுக்கும் புதர்களுக்கும் "முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி போல" தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கேபிள் ட்ரம்கள் மூற்செடிகளுக்கு இருப்பிடமாக மாறி இருக்கிறது
இந்த கேபிள் அமைக்கும் பணியை 3 ஆண்டுகளாக கிடப்பில் போட்டது மின்வாரியத்தின் தவறா அல்லது இந்த பகுதியில் வேலை செய்யவிடாமல் வனத்துறையினர் தடுக்கிறார்களா அல்லது இதை எதுவும் கண்டு கொள்ளாமல் மாவட்ட நிர்வாகம் அலட்சியப் போக்கை எடுத்து வருகிறதா
இதில் எது நடந்திருந்தாலும் வீணாவது என்னமோ அடிமட்ட மக்களின் வரிப்பணமே என்று மக்கள் புலம்பும் நிலை உருவாகியுள்ளது இனி வருகின்ற நாட்களிலாவது மாவட்ட நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக