நாசரேத், சாலமோன் பள்ளியில் முப்பெரும் விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 23 ஜூன், 2025

நாசரேத், சாலமோன் பள்ளியில் முப்பெரும் விழா.

நாசரேத், சாலமோன் பள்ளியில் முப்பெரும் விழா

ஜீன்: 21, நாசரேத் சாலமோன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு, மாணவர்களுக்கான பதவி ஏற்பு விழா மற்றும் யோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி ஆகிய மூன்று நிகழ்ச்சியும் ஒரே நாளில் நடைபெற்றது. 

தமிழ்தாய் வாழ்த்துடன் விழா ஆரம்பமானது. இந்த விழாவில் நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர் அவர்கள் தேசிய கொடி ஏற்றி, மாணவர்களுக்கான பதவி பிரமான பேட்ஜை அணிவித்தார். பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் வரவேற்று பேசி, ஆய்வாளருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினார். பள்ளி தலைவர் எலிசபெத் விழாவினை தொகுத்து வழங்கினார். 

பள்ளி முதல்வர் ஜான்சி கனகராஜ் கொடி அசைத்து அணிவகுப்பை தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்களுக்கு தலைவர்கள், கல்வி அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர், ஒழுங்குமுறை அமைச்சர், கலாச்சார அமைச்சர், சுற்றுசூழல் அமைச்சர் மற்றும் சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள் அணிக்கான பதவி ஏற்பு விழா நடைபெற்றது. சுற்றுசூழல் அணி சார்பாக மாணவர்கள் நாடகம் நடித்து, எவ்வாறு நமது வருங்காலத்தை பாதுகாக்க வேண்டும், மரம் வளர்ப்பதினால் ஏற்படும் நன்மைகள், மரங்களை வெட்டக் கூடாது, 

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. வீணாக புகையை ஏற்படுத்தி மாசு செய்ய கூடாது, மரம் வளர்ப்போம், மழை பெறுவோம். தண்ணீரை வீணாக்க கூடாது என நடித்து காட்டினர். அதன் பின் ஆய்வாளர் வனசுந்தர் மரக்கன்றுகளை நட்டுவித்து மாணவர்களின் நலன்களை பற்றியும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். மாணவர்கள் வருங்கால இந்தியாவின் தூண்கள் என சிறப்புரையாற்றினார். 

அதன்பின் யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்கள் யோகா சாகசம் செய்து காட்டினர். உதவி முதல்வர் மாரிதங்கம் நன்றியுரை கூறினார். தேசிய கீதம் முழங்க விழா சிறப்பாக முடிவுற்றது. இந்த ஏற்பாட்டினை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad