சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் சர்வதேச யோகா தினம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 23 ஜூன், 2025

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் சர்வதேச யோகா தினம்


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது . 


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டக் குழுவின் சார்பாக சர்வதேச யோகா தின நிகழ்ச்சி  கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் நிலோபர் பேகத்தின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.   கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாவரவியல் துறைத் தலைவர் முனைவர் கோமளவல்லி  தலைமை வகித்தார்.

 

நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் முனைவர் சுந்தரி  வரவேற்புரை வழங்கினார்.   கல்லூரியின் யோகா மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுப்பு யோகா பயிற்சியினை செய்து , யோகாவினால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார். அவரின் வழிகாட்டுதலின்படி அனைத்து மாணவர்களும் யோகா பயிற்சி செய்தனர்.    நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்  முனைவர்  செந்தில்குமார் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் நாட்டு நலப் பணி திட்ட அலுவலர்கள் முனைவர் செந்தில்குமார், முனைவர் லட்சுமணக் குமார் மற்றும் பேராசிரியர்களும், நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad