தல்லாகுளம் ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் ஆலயத்தில் படையலிட்டு, கிடா வெட்டி, அன்னதானம் வழங்கிய மானாமதுரை பக்தர்கள்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மதுரை தேசிய நான்கு வழி நெடுஞ்சாலையில் உள்ள தல்லாகுளம் ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் ஆலயத்தில் வருடா வருடம் ஆனி மாதம் முதல் வெள்ளியன்று நடைபெறும் படையல் மற்றும் கிடாவெட்டு நிகழ்வானது, இந்த வருடம் விசுவாவசு வருடம் ஆனி மாதம் ஆறாம் தேதி வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீ தர்ம முனீஸ்வரருக்கு படையலிட்டு, தர்ம முனீஸ்வரர் ஆலயத்தின் பெயர் பலகைக்கு மாலை சாற்றப்பட்டு, சுமார் 11 கிடாய்கள் பலியிடப்பட்டு சிறப்பு அன்னதானம் மானாமதுரை பக்தகோடி பெருமக்கள் சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகிகள், மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பக்தகோடி பெருமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக