அரசு அதிகாரிகளுக்கு மனு கொடுத்து எந்த பயனும் இல்லை பணத்தால் தலை விரித்து ஆடும் திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்!
கே வி குப்பம் , ஜூன் 29 -
வேலூர் மாவட்டம் கீ.வ.குப்பம் வட்டம் பசுமாத்தூர் கிராமத்தில் சர்வே எண் 412-1 ல் உள்ள மந்தைவெளி புறம்போக்கு இடத்தை பசுமாத்தூர் கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அ.ஏழ்மைநாதன் மற்றும் அவர்களது பங்காளிகள் சேர்ந்து முள்வேலி அமை த்து ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். அதை கேட்க சென்றால் அடி உதை கொலை மிரட்டல் முள் வேலி அமைத்து ஆக்கிரமிப்பு குறித்து வருவாய் துறை அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுக்கப் பட்டது வருவாய் ஆய்வாளர் வந்து பார்த்து ஆக்கிரமிப்புகளை எடுக்க கூறினார் அதன்பிறகு பெரிய ஆண்டவர் பொம்மையை நிறுவி இது கோயில் நிலம் என்றனர். அதன் பின்னர் அதிகாரி களுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை அதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள் புகார்தாரர் கூறும் இடத்தில் ஆக்கிரமிப்பு இருந்தால் அதனை விசாரி த்து ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களில் எடுக்க உத்தரவிட்டனர். சிறிது பெருட் படுத்தாமல் நீதிமன்ற உத்தரவாது மயிறா வது என்று கூறி உதசினம் படுத்தி வருகின்றனர்.அதன் பின்னர் வருவாய் கோட்டாட்சியர் குடியாத்தம் அவர்கள் விசாரித்து ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ள இடத்தில் உள்ள முள்வேலியை 30 நாட்களுக்குள் எடுக்க வேண்டும் என்றும் அந்த இடத்தில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பெரியாண்டவர் சிலையை ஏற்படுத்தி வணங்கிய பின் 3 ஆம் நாள் அதனை கலைத்துவிட்டு செல்லவேண்டும் என்று வட்டாட்சியர் அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன் பின்னர் வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் அவர்களால் ஆக்கிரமிப்பை அகற்ற கடிதம் கொடுக் கப்பட்டது. கோட்டாட்சியர் கொடுத்த 30 நாள் முடிவடைந்த பிறகு பசுமாத்தூர் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோருக்கு பணம் கொடுக்கப்பட்டதால் அந்த பொம்மையை சுற்றி கான்கிரீட் தரை போடப்பட்டது உயர்நீதிமன்றம் மற்றும் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தும் அதனை மதிக்காமல் இன்றுவரை கூட அந்த உத்தரவுகளை நிறைவேற்றாமல் உள்ளார் வட்டாட்சியர் முரளிதரன் அவர்கள் நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் மற்றும் சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நலச் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக