இருசக்கர வாகனத்தில் விபத்துக்குள் ளான இளைஞர் மூலை சாவு உடல் உறுப் புகள் தானம்!
வேலூர் , ஜூன் 02 -
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த
அரப்பாக்கம் கிராமம், சிவராஜபுரத்தை சேர்ந்த ராஜ்குமார் அவர்களின் இளைய மகன் சுரேந்தர் (வயது 23 ), திருமணம் ஆகாதவர் வேலூர் ஊரிஸ் கல்லூரியில் பி ஏ ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர் கடந்த 31.05.2025 ஆம் தேதி மதியம் 12 மணி அளவில், பூட்டுத்தாக்கு மேலக்குப்பம் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்துக் குள்ளானார். தீவிரசிகிச்சைக்காக CMC மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று, ஜூன் 1 அன்று மாலை 8 :45 க்கு மூளை சாவு அடைந்தார். இவருடைய குடும்பத்தினர் இவர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்துள்ளனர். இவருடைய இருதயம் மற்றும் நுரையீரலை சென்னை அப்போ லோ மருத்துவமனைக்கும் , கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகத்தை CMC ராணிப் பேட்டைக்கும் , ஒரு சிறுநீரகத்தை சென்னை காளியப்பா மருத்துவ மனை க்கும், கண்கள் CMC மருத்துவமனைக்கும் வழங்கப்படவுள்ளது.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக