அரசு பென்ட் லாண்ட் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை முதன்மை செயலாளர் ஆய்வு!
வேலூர் , ஜூன் 7 -
வேலூர் அரசு பென்ட்லாண்ட் மருத்துவ மனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் பி.செந்தில் குமார், இன்று (07.06.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தேசிய நல்வாழ்வு இயக்க மேலாண்மை இயக்குநர் மரு. அ. அருண் தம்புராஜ், மாவட்ட ஆட்சித் தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி, மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநர் மரு. தேரணிராஜன், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. ரோகிணி தேவி, பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் சுடலைமுத்து, உதவி செயற்பொறியாளர் படவேட்டான் உட்பட பலர் உடன் இருந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக