அவினாசியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு தயாரிப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 7 ஜூன், 2025

அவினாசியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு தயாரிப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது


இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு , இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்

திருப்பூர் புறநகர் மாவட்ட இரண்டாவது மாநாடு வரும் ஜூன் 22 ,23 ஞாயிறு திங்கள் ஆகிய இரண்டு நாட்கள் அவிநாசி குலாலர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

1925 டிசம்பர் 26 ஆம் தேதி துவக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு  நூற்றாண்டு விழா கொண்டாடுகிற இந்தத் தருணத்தில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் புறநகர் மாவட்ட மாநாடு அவிநாசியில் கூடுகிறது.

22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மாநாடு துவங்கி திருப்பூர் புறநகர் மாவட்டம் முழுவதும் 150 பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். முதல் நாள்மாநாடு நடைபெற்று முடிந்து மாலை 4 மணிக்கு அவிநாசி புதிய பஸ் நிலையத்தில் இருந்து உழைப்பாளி மக்களின் பேரணி துவங்கி பழைய பஸ் நிலையம், தாலூக்கா அலுவலகம், மடத்துப்பாளையம் ரோடு, சென்று அவிநாசி செங்காடு வ .உ .சி மைதானத்தில் பல்லாயிரக் கணக்கான உழைப்பாளிகள் கலந்து கொள்ளக்கூடிய பிரமாண்டமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் புறநகர் மாவட்ட மாநாட்டு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

மாநாட்டு பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தோழர் இரா .முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினரும் , கட்சியின்மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் . 

தோழர் 

கே .சுப்பராயன், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் தோழர்.வகிதா நிஜாம், 

தோழர் .எம் .ரவி, திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் கே. எம். இசாக்,

துணை ச்செயலாளர்கள்,

 எம் மோகன்,

 ஜி .ரவி ,

பொருளாளர் 

வி .பி .பழனிசாமி, மாவட்ட மாதர் சங்க செயலாளர்

 எம்.நதியா , ஆகியோர் கலந்துகொண்டு பேச இருக்கின்றனர்.

மாநாடு சிறப்பாக நடத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு தயாரிப்பு பேரவை கூட்டம் 3 .5. 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு அவிநாசி குலாலர் திருமண மண்டபத்தில் மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் சேவூர் ஆர். ஷாஜகான் தலைமையில் மாநாட்டு தயாரிப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. மாநாட்டு தயாரிப்பு பேரவை கூட்டத்தில் மாநாட்டு வரவேற்பு குழு உறுப்பினர்கள்

ஏ.ஜி.சண்முகம், இரா.முத்துசாமி, எஸ்.செல்வராஜ், பி.அர்ஜுனன் விகோபால் 

ஏ.ஆர்.கந்தசாமி  மற்றும்  அவிநாசி ஒன்றியம் முழுவதும் உள்ள அனைத்து கட்சிகிளை நிர்வாகிகள் ,மற்றும் ஊத்துக்குளி, பல்லடம், திருமுருகன்பூண்டி, தாராபுரம், காங்கேயம், உடுமலைப்பேட்டை,

பொங்கலூர், திருப்பூர் ஒன்றியம் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த நிர்வாகிகளை உள்ளடக்கி வரவேற்பு குழு உறுப்பினர்கள் 100 பேர் கலந்து கொண்டனர்.

வரவேற்பு குழு கூட்டத்தில் அவிநாசியில் நடைபெறுகிற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டை இரண்டு நாள் சிறப்பாக நடத்திடவும், பிரச்சாரம்,  விளம்பரம் ,

மற்றும் திருப்பூர் புறநகர் மாவட்டம் முழுவதும் மக்கள் மத்தியில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேச விடுதலைக்காகவும் விடுதலைக்கு பின்னர் இந்திய உழைப்பாளி மக்களுக்காகவும் கடந்த நூறு ஆண்டுகளாக எண்ணற்ற தியாகங்களை செய்து உரிமைகளை பெற்று கொடுத்திருக்கிற தியாக வரலாறுகளை பற்றியும், இன்றைக்கு மத்தியில் ஆட்சி செய்யும் ஒன்றிய பிஜேபி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்தும், மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை கொண்டு செல்லும் வகையில் மாநாடு சிறப்பாக அமைய அனைத்து தோழர்களும் சிறப்பான முறையில் செயல்பட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு தயாரிப்பு பேரவை கூட்டத்தில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர். கே. சுப்பராயன் பேசினார் இந்த நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad