வத்தலக்குண்டு அருகே குழந்தைகள் கண் முன்னே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கணவாய்பட்டி, காந்திநகரை சேர்ந்த பிரசித்சந்திரன் - அஜித்ரா தம்பதியினர் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் தகாத வார்த்தையால் திட்டியதால் அவமானம் தாங்காமல் மன உளைச்சலில் சேலையால் மின்விசிறியில் குழந்தைகள் கண் முன்னே ஜூன் 25 இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் விக்டோரியா தலைமையிலான போலீசார் அஜித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி.கன்வர் பீர்மைதீன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக