குடியாத்தம் வயது முப்பின் காரணமாக இறந்தவரின் கண்கள் தானம்!
குடியாத்தம் , ஜூன் 11 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் தாழையாத்தம் பகுதி வரதராஜன் வீதி யில் வசித்த. தேரா. பந்த் .சபா பவன். மூத்த உறுப்பினர். எஸ். தாராசந்த்
ஜெயின் (வயது 80)உடல்நலக்குறைவால் 11/06/25 விடியற்காலை இயற்கை எய்தி னார். அன்னாரின் மகன் ஜஷ்வந்த் மற்றும் சகோதரர்கள் அசோக்குமார், மகா வீர் ஆகியோரின் ஒப்புதலின் பேரில் அன்னாரின் கண்கள் தானமாக பெறப் பட்டு வேலூர் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப் பட்டது. கண்கள் தானமாக வழங்கிய குடும்பத்தாருக்கு குடியாத்தம் ரோட்டரி சங்கம் நன்றி தெரிவிப்பதோடு, அன்னா ரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப் படுகிறது. அன்னாரின் நெருங்கிய உறவினர் ரோட்டரி மாவட்டம் 3231ன் முதல் ஆளுநர் கே.ஜவரிலால் ஜெயின், குடியாத்தம் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் அரிகிருஷ்ணன், அண்ணா மலை, நாகலிங்கம், குணசேகரன் ஆகி யோர் முன்னிலையில் சங்க கண் மற்றும் உடல்தானக்குழு தலைவர் எம்.ஆர்.மணி உரிய ஏற்பாடுகளை செய்தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி
ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக