தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ...!!
தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு – மாநில தலைவர் நீதியரசர் தமிழ்வாணன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது.நிதி அரசர் தமிழ்வாணன், தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார் கிரி அப்பனார், மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், காவல் ஆணையாளர் சரவணகுமார் உள்ளிட்டோர், பல துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்பினர் தங்களுடைய குறைகளை மனுவாக கொடுத்தனர். நலத்திட்ட உதவிகளை பற்றி பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்வாணன் கள ஆய்வு நடத்துவதற்காக தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தலைவர் என்ற முறையில் நானும் மற்றும் 4 உறுப்பினர்களும் வந்திருக்கிறோம் என்றார். இந்தக் கூட்டத்தில் ஏகப்பட்ட மனுக்கள் வழங்கப்பட்டிருக்கிறது அதனை செய்து கொடுப்பதற்காக இந்த கூட்டம் அமைக்கப்பட்டது என்றார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக