உதகை நகர திமுக சார்பில் - துண்டு பிரசுரம்.
தமிழகத்தில், பாஜக., கூட்டணி ஆட்சி அமையும் என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அவர்கள் கூறியுள்ள நிலையில் அதைப் பற்றி எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், பா.ஜ.க.,வின் அடிமையாக திகழ்ந்து எடப்பாடி பழனிசாமி அவர்கள் இருந்துகொண்டு
தமிழ்நாடு மக்களுக்கு துரோகம் செய்து வருவதை பொதுமக்களுக்கு தெரிவித்திடும் வகையில், "காவியின் அடிமையில் எடப்பாடி " எனும் தலைப்பில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி
உதகை நகர திமுக சார்பில் உதகை நகர கழக செயலாளர் எஸ்.ஜார்ஜ் அவர்களின் தலைமையில், உதகை மார்க்கெட், ஏ.டி.சி உள்ளிட்ட நகர பகுதி முழுவதும் வழங்கப்பட்டது.
மாவட்ட துணை செயலாளர் - உதகை நகரமன்ற துணை தலைவர் ரவிகுமார் துண்டு பிரசுரங்கள் வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
நகர மன்ற தலைவர் வாணீஸ்வரி, நகர அவை தலைவர் ஜெயகோபி, நகர துணைச் செயலாளர்கள் கார்டன் கிருஷ்ணன், ரீட்டா மேரி, நகர பொருளாளர் அணில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேஷ், தம்பி இஸ்மாயில், கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக