பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுப்பதற்காக, என்எல்சி தலைமை அலுவலகத்தை நோக்கி பேரணி.
காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எஸ்சி இந்தியா நிறுவனத்தில் சுமார் 10,000-க்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறு பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் சார்பில், வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுப்பதற்காக, பெரியார் சதுக்கத்தில் இருந்து சீருடை பேரணியாக புறப்பட்டனர். அவ்வாறு புறப்பட்டு என்எல்சி தலைமை அலுவலகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஏழு நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்தனர். பின்னர் ஏழு நபர்கள் மட்டும், என்எல்சி தலைமை அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம், 14 நாட்கள் கால அவகாசம் கொடுத்து, வேலை நிறுத்த நோட்டீசை கொடுத்துள்ளனர். இதுகுறித்து ஸ்டாலின் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வருகின்ற ஜூலை முதல் வாரத்தில், தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன், தங்களது குடும்ப அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரிக்கை விடுத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக