அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் சிறப்பு பிரார்த்தனை -தீப அஞ்சலி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 ஜூன், 2025

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் சிறப்பு பிரார்த்தனை -தீப அஞ்சலி.

 


அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில்  சிறப்பு பிரார்த்தனை -தீப அஞ்சலி.



அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட விமானம் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமானம் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


விபத்து பற்றி ஏர் இந்தியா வெளியிட்ட செய்தியில், அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.38 மணிக்குப் புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர் என்றும், பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்ச்சுக்கல் நாட்டினர் என்றும் தெரிவித்துள்ளது.


உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய மதுரை எஸ்எஸ்காலனியில் உள்ள ஶ்ரீ மஹாபெரியவர் கோவிலில் அனுஷத்தின் அனுக்கிரஹம் அமைப்பு நிறுவனர் நெல்லை பாலு தலைமையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.  சிறுவர் சிறுமியர் பெண்கள் முதியோர் மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட பலர் பங்கேற்று தங்களது அஞ்சலிகளை செலுத்தினர்.


இந்த நிகழ்வில் திரளானோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad