முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி.கே.பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வாழ்த்தினர்.
தாராபுரத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்டேன் பொன்னுசாமி - சத்யாபாமாமா (முன்னாள் ஊராட்சி குழு தலைவர்) தம்பதிகளின் மகனான கிருஷ்ணா-நிவேதா திருமண வரவேற்பு நிகழ்வு மூலனூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்கள் பங்கேற்று மணமக்கள் 16 செல்வங்களைப் பெற்று நீடூடி வாழ வேண்டும் என்று மனநிறைவோடு வாழ்த்தினர். இந்த நிகழ்வில் அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்பி.வேலுமணி திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான மகேந்திரன், முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், தாமோதரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவசாமி, என்.எஸ்.நடராஜன், பரமசிவம், உட்பட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், உறவினர்கள் என பலர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக