ஆலந்தலை புனித அந்தோனியார் ஆலய ஆண்டு திருவிழா கடந்த 1ம் தேதி தூத்துக்குடி சிறுமலர் குருமடம் அதிபர் அருட்திரு உபட்டர்ஸ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் நவநாள் திருப்பலியும் நடைபெற்றது.
13 ம் திருவிழாவான இன்று
காலை 6.30 மணிக்கு மணவை மறைவட்ட முதன்மை குருவும், கல்லாமொழி பங்கு தந்தையுமான அருட்திரு பென்சிகர் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதில் முகப்புகழ்ச்சி செய்கிறவனை பார்க்கிலும் கடிந்து கொள்கிறவரே முடிவில் பெரிதும் பாராட்ட பெறுவர் என்ற தலைப்பில் நற்செய்தியை வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலந்தலை திருத்தல அதிபர் அருட்பணி சில்வெஸ்டர், உதவி பங்குத்தந்தை அருட்பணி அந்தோணி அருட் டைட்டஸ் மற்றும் அருட் சகோதரிகள், ஆலை நகர் இறைமக்கள் ஊர் நல கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக