திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, ராதாபுரம் யூனியன் அலுவலகத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை ஒத்திகை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 ஜூன், 2025

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, ராதாபுரம் யூனியன் அலுவலகத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை ஒத்திகை.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, ராதாபுரம் யூனியன் அலுவலகத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் பேரிடர் காலங்களில் கட்டிடங்களில் உள்ளே சிக்கிக் கொள்பவர்களை மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கிக் கொள்பவர்களை எப்படி மீட்டெடுப்பது என்பது குறித்து ஒத்திகையை செயல்முறைகளை வீரர்கள் செய்து காட்டி அரசு அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

குறிப்பாக மழை வெள்ளம், நிலநடுக்கம் கட்டிடங்கள் இடிந்து விழும் நேரங்களில் இடர்பாடுகளில் சிக்கிக் கொள்பவர்களை எப்படி மீட்டெடுத்து காப்பாற்றுவது என்ற ஒத்திகையை பேரிடர் மீட்புப்படையினர் செய்து காண்பித்தனர். இது பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைந்தது.

திருநெல்வேலி மாவட்ட செய்தி தொடர்பாளர் என்.ராஜன், இருக்கன்துறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad