விவசாயிகள் நலச்சங்கம் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 ஜூன், 2025

விவசாயிகள் நலச்சங்கம் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

விவசாயிகள் நலச்சங்கம் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, ராதாபுரம் பகுதி விவசாயிகள் சார்பாக நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ராதாபுரத்தில் நடைபெற்றது. இதற்கு ராதாபுரம் வட்டார விவசாயிகள் நலச்சங்க தலைவர் சி.சுந்தரம் தலைமை ஏற்றார். 

விவசாயிகள் நலச்சங்க சார்பில் பலரும் கலந்து கொண்டனர். இதில் பேச்சிப்பாறை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடாதது குறித்தும், ராதாபுரம் பகுதிகளில் இயங்கி வரும் குவாரிகளால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதால் மேற்படி குவாரிகளை மூட கோரியும், விவசாயத்தை பாதிக்கும் மீன் கம்பெனிகளை மூட கோரியும் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். 

இதில் விவசாயிகள் நலச்சங்கத்தை சேர்ந்தவர்களுடன் ராதாபுரம் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். இறுதியில் துணை செயலாளர் சுடலையாண்டி நன்றியுரை தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட செய்தி தொடர்பாளர் என்.ராஜன், இருக்கன்துறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad