ஈரோட்டில் ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்தில் தீ விபத்து : - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 ஜூன், 2025

ஈரோட்டில் ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்தில் தீ விபத்து :


ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்தில் தீ விபத்து. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.


ஈரோடு மாணிக்கம் பாளையம், அடுத்த வக்கீல் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். அதே பகுதியில் ஆனந்துக்குச் சொந்தமான ஐஸ்கிரீம் விற்பனை நிலையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு விற்பனை நிலையத்தை மூடிவிட்டுச் சென்றுவிட்டார்.


இந்நிலையில் நேற்று காலை 2 மணி அளவில் கடையிலிருந்து அதிக அளவில் கரும் புகை வெளிவந்தது.


சிறிது நேரத்தில் தீ கொளுந்து விட்டு எறிய தொடங்கியது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்தில் உள்ள ப்ரீஜர், ஏசி மெஷின் உள்ளிட்டவை தீயில் கருகி நாசமாயின. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானது.

தமிழக குரல் இணையதள செய்தியாளர் 

ம.சந்தானம் 

ஈரோடு மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad