திருப்புவனத்தில் முன்னாள் முதல்வர் திரு மு. கருணாநிதி அவர்களின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடிய திமுக நிர்வாகிகள்.
ஜூன் 3ஆம் தேதியன்று மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் திரு மு. கருணாநிதி அவர்களின் 102-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்புவனத்தில் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மானாமதுரை சட்டமன்ற திமுக சார்பாக மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசி ரவிக்குமார் வழங்கினார்.
இதில் மாவட்ட துணைச் செயலாளர் த.வேங்கைமாறன், திருப்புவனம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வசந்தி, திருப்புவனம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சுப்பிரமணியன், பேரூர் கழகச் செயலாளர் நாகூர் கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி மற்றும் கிளைகளை சேர்ந்த கழக நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் திமுகவின் அனைத்து அணிகளின் முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக