மானாமதுரையில் முன்னாள் முதல்வர் திரு மு. கருணாநிதி அவர்களின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடிய திமுக நிர்வாகிகள்.
ஜூன் 3ஆம் தேதியன்று மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் திரு மு. கருணாநிதி அவர்களின் 102-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மானாமதுரை நகராட்சி அலுவலகம் அருகில் மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகளின் சார்பாக கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இதில் மானாமதுரை நகர் கழக செயலாளர் பொன்னுசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாமணி, மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, நகர்மன்ற துணைத் தலைவர் பாலசுந்தரம், வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துசாமி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி மற்றும் கிளைகளை சேர்ந்த கழக நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் திமுகவின் அனைத்து அணிகளின் முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மானாமதுரையில் உள்ள அண்ணா சிலைக்கும் திமுக கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக