உதகை புனித அந்தோனியார் ஆலயத்தின் 129 ஆம் ஆண்டு விழா.
நீலகிரி மாவட்டம் உதகை சேரிங் கிராஸ் பகுதியில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 129 ஆம் ஆண்டு விழா இன்று மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது இன்று காலை ஆலயத்தில் ஏழு மணி திருப்பலி பூசையும் 11 மணிக்கு நீலகிரி மாவட்ட ஆயர் பிஷப் அவர்கள் திருப்பலிப் பூசையில் பங்கேற்று விமர்சையாக திருப்பலி நடைபெற்றது மதியம் 12 மணி அளவில் ஆலய வளாகத்தில் அன்னதானமும் நடைபெற்றது இன்று மாலை 5 மணி அளவில் திருத்தேர் பவனி நடைபெற உள்ளது அது சமயம் ஆலய பங்கு மக்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தனர்.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக