டாக்டர் பட்டம் பெற்ற விஐடி பல்கலை கழக வேந்தர் ஜி.விசுவநாதனுக்கு காட்பாடி ரெட்கிராஸ் பாராட்டு!
காட்பாடி , ஜூன் 12 -
வேலூர் மாவட்டம் காட்பாடி விஐடி பல்கலைகழகத்தின் வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் அவர்களுக்கு அமெரிக் காவின் நியூயார்க்கில் உள்ள ரோசெஸ் டர் தொழில்நுட்பக் கழகம் (RIT) கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தை பாராட்டி இன்று அவரது விஐடி அலுவல கத்தில் காட்பாடி வட்ட ரெட்கிராஸ் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்தும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
முன்னதாக, விஐடி வேந்தருக்கு 2009 ஆம் ஆண்டில் மேற்கு வர்ஜீனியா பல்கலைக் கழகம் மற்றும் 2024 ஆம் ஆண்டில் நியூ யார்க் மாநில பல்கலைக்கழகம், பிங்காம் டன் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது, கூடுதலாக 2025 ஆம் ஆண்டில் கொல்கத்தாவின் செயிண்ட் சேவியர்ஸ் பல்கலைக் கழகத்தால் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தற்போது 2025-மே மாதம்அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ரோசெஸ்டர் தொழில்நுட்பக் கழகம் (RIT) கௌரவ
டாக்டர் பட்டம் வழங்கியது கௌரவித் துள்ளதற்கு வேலூர் மாவட்டம் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில் வாழ்துக்களையும்பாராட்டுகளை யும் தெரிவித்துள்ளது.வேலூர் விஐடி பல்கலை வளாகத்தில் வேந்தர் டாக்டர். கோ.விசுவநாதன் அவர்களை காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் அவைத்தலைவர்முனைவர்.செ.நா.ஜனார்த்தனன், அவைத்துணைத்தலைவர்கள் முனைவர் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜய குமாரி, பொருளாளர் வி.பழனி, மருத்து வக்குழு தலைவர் டாக்டர் வீ.தீனபந்து, மேலாண்மைக்குழு உறுப்பினர் பி.என். ராமச்சந்திரன், செயலாளர் எஸ்.எஸ். சிவவடிவு, தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின் ஒருங்கிணைந்த மாவட்ட தலை வர் எஸ்.பூபாலன், ஆம்பூர் சீனிவாசன் ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துகளையும் பாராட்டு களையும் தெரிவித்தனர்.ரெட்கிராஸ் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருவது குறித்து வேந்தர் ஜி.விசுவநாதன் பாரா ட்டினார். தொடர்ந்து சிறப்பாக செயல்படு வதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக