தமிழர்களின் கீழடி வரலாற்றை உலகெங்கும் எடுத்துச் செல்ல மதுரையில் ஒன்றிணைந்த திமுக மாணவரணி, ஒன்றிய பாஜக அரசுக்கு கடும் கண்டனம்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் கீழடியில் தமிழர்களின் தொன்மையை உலகிற்கு பறைசாற்றும் விதமாக நடைபெற்ற பல கட்ட அகழ்வாராய்ச்சிக்கு பிறகு தொல்லியல் துறையின் சார்பாக கீழடி ஆய்வறிக்கையை ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆய்வு அறிக்கையின் முடிவுகளை ஒன்றிய பாஜக அரசு வெளியிடவும், அங்கீகரிக்கவும் மறுத்து, சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையில் சில மாற்றங்களையும், திருத்தங்களையும் மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு வலியுறுத்தப்பட்டது.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொன்று தொட்டு வரும் தமிழர்களின் பெருமையை உலகம் அறியா வண்ணம் மூடி மறைக்க ஓரவஞ்சகம் காட்டி தமிழர்களின் தொன்மையில், இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டாலும் தமிழர்களின் வரலாற்றை ஒருபோதும் மறைக்க முடியாது என்பது தெரியாத பாஜக அரசை, தமிழர்களின் வரலாற்றில் அரசியல் செய்யும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திமுக கழகத் தலைவர் திரு மு. க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பெயரிலும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில் மதுரையில் திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.
இதில் திமுக துணைப் பொதுச் செயலாளர் திரு. திருச்சி சிவா, நாடாளுமன்ற உறுப்பினர் திரு தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் திமுகவின் மாநில மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசி ரவிக்குமார் அவர்கள் தன் சார்பாகவும், தன் தொகுதி வாக்காளர் பெருமக்கள் சார்பாகவும் ஒன்றிய பாஜக அரசிற்கு எதிராக மிகக் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தார்.
இந்நிகழ்வில் மானாமதுரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, திமுக மாநில மாணவரணி துணை செயலாளர் பூர்ண சங்கீதா, சிவகங்கை மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கதிர் ராஜ்குமார், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் ரம்யா, திமுகவின் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த மாணவரணி நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள், திமுக கட்சியின் பல்வேறு பிரிவுகள் மற்றும் அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு தங்களின் வரலாற்றையும், தொன்மையையும் முடி மறைக்க பார்க்கும் ஒன்றிய பாஜக அரசிற்கு எதிராக மிகக் கடுமையான மற்றும் வன்மையாக தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.
மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்க வருகை புரிந்த மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கீழடிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக