மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளையொட்டி அவரது புகழை பரப்பும் வகையிலும், முதல்வர் மு .க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் நான்காண்டு சாதனைகளை விளக்கியும் பரமன்குச்சி பஜாரில் தெருமுனை பிரச்சார கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைப்படி நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோஜ் தலைமை வைகித்தார்.
பேரூர் இளைஞரணி அமைப்பாளர் இஜாஸ் அகமது வரவேற்று பேசினார். ஒன்றிய திமுக செயலாளர் இளங்கோ ,பேரூர் செயலாளர் மால் ராஜேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மணல்மேடு சுதாகர், ஏ எம் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் பொன்னரசு, சண்முக நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.மாநில மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளர் ஜெசி பொன் ராணி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, மாவட்ட பிரதிநிதிகள் மதன்ராஜ் ஜெயபிரகாஷ் , மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செந்தில், மாவட்ட திமுக தொழிலாளர் தொண்டரணி துணை அமைப்பாளர் தயாநிதி, மாவட்ட மகளிர் சமூக வலைதள பொறுப்பாளர் நித்யா,
மாவட்ட சமூக வலைதள பொறுப்பாளர் மாநாடு பாலமுருகன்,மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் மாடசாமி, குலசேகரப்பட்டினம் அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாபுஜி, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் சிங்க ராஜா, ஒன்றிய அவைத் தலைவர் ஷேக் முகமது ,ஒன்றிய பொருளாளர் பாலகணேஷ்,
பேரூராட்சி கவுன்சிலர் மும்தாஜ் பேகம், முன்னாள் கவுன்சிலர் சலீம், ராஜேந்திரன்,சார்பு அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் சீனிவாசன், செந்தில் அதிபன், முத்துராமலிங்கம், மற்றும் நவீன் குமார், கோபிநாத், பஜார் கழக செயலாளர் பூங்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக