உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்.. கலெக்டர் நேரில் ஆய்வு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 ஜூன், 2025

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்.. கலெக்டர் நேரில் ஆய்வு



ஈரோடு மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுங்கரா ஆய்வு மேற்கொண்டார். 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின்படி, ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்சசித் திட்டப்பணிகளை, மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுங்கரா ஒவ்வொரு மாதமும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.



அந்த வகையில், உங்களைத்

தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்

கீழ், மாவட்ட கலெக்டர் அலுவலக

வளாகத்தில் ரூ. 6 கோடி மதிப்பில்

நடந்து வரும் அதிநவீன தொழில்நுட்ப

நூலகத்தினை நேற்று நேரில்

பார்வையிட்டு, மாவட்ட கலெக்டர்

ராஜகோபால் சுங்கரா ஆய்வு

மேற்கொண்டார். திருப்பதி கார்டன்

பகுதியில், அம்ரூத் திட்டம் மற்றும்

உலக வங்கி நிதி உதவியுடன் ரூ 

21 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும்

குடிநீர் திட்டப்பணிகள், சூரம்பட்டி மீன்

மார்க்கெட் பகுதியில் உள்ள பொது

சுகாதார வளாகத்தையும் அவர் ஆய்வு

மேற்கொண்டார்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் 

ம.சந்தானம் 

ஈரோடு மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad