அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 60. 50 லட்சம் மோசடி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 ஜூன், 2025

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 60. 50 லட்சம் மோசடி



ஈரோட்டில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 17 பேரிடம் ரூ. 60.50 லட்சம் பெற்று மோசடி செய்த அங்கன்வாடி பெண் பணியாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். ஈரோடு ஜீவானந்தம் சாலை புதுமை காலனியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் மனைவி கிருஷ்ணவேணி (47) அங்கன்வாடி பணியாளர்.


கடந்த 2020ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை தனக்குப் பழக்கமான நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். கிருஷ்ணவேணி கூறியதை உண்மையென நம்பி, 17 பேர் ரூ. 60 லட்சத்து 50 ஆயிரத்தை கிருஷ்ணவேணியிடம் கொடுத்துள்ளனர். பணத்தைப் பெற்றுக்கொண்ட கிருஷ்ணவேணி அரசு வேலை விரைவில் கிடைத்துவிடும் என நம்பிக்கை தெரிவித்து வந்துள்ளார். ஆனால், அவர் கூறியபடி வேலை வாங்கித் தராததால், பணம் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பக் கேட்க, பணத்தையும் தர மறுத்துள்ளார்.


இதனால், பணம் செலுத்தியவர்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.


இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு அடுத்த அவல்பூந்துறையைச் சேர்ந்த சுரேஷ் (44) என்பவர் தலைமையில் தனித்தனியாக ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி, கிருஷ்ணவேணி மீது மோசடி வழக்குப் பதிவு செய்து நேற்றுமுன்தினம் கைது செய்தனர். பின்னர், நீதிமன்ற உத்தரவுப்படி கிருஷ்ணவேணியை கோவையில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.


 தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால் ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad