திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இதிலே எதிரில் அரசு அச்சகம் திறக்கப்பட்டது ஆதார் கார்டு பான் கார்டு ரேஷன் கார்டு வாக்காளர் அட்டை டிரைவிங் லைசன்ஸ் என ஒவ்வொரு அடையாள சான்று ஆவணங்களிலும் பெயர் தவறாக இருந்தால் சரியான ஆவணங்களை கொண்டு திருத்தம் செய்யலாம் புதிய பெயர் மாற்றப்படும் பொழுது அரசு இதழில் வெளியிடப்பட வேண்டும் இனி பெயர் மாற்றம் செய்ய சேலம் செல்ல வேண்டாம் தமிழகத்தில் சென்னை சேலம் மதுரை திருச்சி விருத்தாச்சலம் புதுக்கோட்டை ஆகிய ஆறு இடங்களில் அரசு அச்சகம் செயல்பட்டு வந்தது ஏழாவது கிளையாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தின் பின்புறம் திறக்கப்பட்டுள்ளது அரசு துறைகளுக்கான அனைத்தும் இங்கு அச்சிடப்படும் கோவை திருப்பூர் ஈரோடு நீலகிரி சேர்ந்த பொதுமக்கள் இதனால் பெரிதும் பயனடைவர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக