வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பு கோரி மக்கள் கண்டனப் பேரணி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 ஜூன், 2025

வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பு கோரி மக்கள் கண்டனப் பேரணி.


வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பு கோரி மக்கள் கண்டனப் பேரணி.

 

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர் சோலை மட்டம் அருகே பேபி நகர் என்றும் இடத்தில் யானை தாக்கி கொடூரமான நிலையில் ஒருவர் பலி இவரது உடல் அரசு மருத்துமனையில் பிரேத பரிசோதனைக்காக  வைக்கப்பட்டது.


கூடலூர் பகுதியில் தொடர்ந்து ஏற்படும் வனவிலங்கு தாக்குதல்களில் இருந்து பொதுமக்களை  காப்பாற்ற அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி, தேவர் சோலை சார்ந்த பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் ,சில கட்சி நிர்வாகிகள்  மேல் கூடலூர் பகுதியில் கண்டனப் பேரணியை நடத்தினர்.


100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்ற இந்த பேரணி, மேல்கூடலூரில் இருந்து  நடைபயணம் செய்து கவனத்தை ஈர்த்தனர்


பேரணி முழுவதும் “எங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும்”, “யானைகளும் கரடிகளும் எங்கள் வீடுகளை அச்சுறுத்துகின்றன” என கூச்சலிட்டு, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


கடந்த சில மாதங்களில் அதிகரிக்கும்  யானை ,புலிகள் தாக்குதல்கள், மற்றும் இரவு நேரங்களில் கரடிகள், காட்டுப்பன்றிகள் உள்நுழையும் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


விளை நிலங்கள் பாதிப்பு அடைந்துள்ளன மற்றும் வீட்டில் வளர்க்கும் நாய்கள் பசுக்கள்  தாக்கப்பட்டுள்ளன.


கூடலூரில் நடைபெற்ற  மக்களின் இந்த  கண்டனப் பேரணி, சாலை மார்க்கமாக கூடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சென்றடைந்தது.இது வனவிலங்குகளால் அச்சுறுத்தப்படும் கிராமப்புற வாழ்வின் உண்மை நிலையை வெளிப்படுத்தியுள்ளது.

 

இது அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்து, நிலையான தீர்வுகளுக்கு வழிவகுக்கும் என மக்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌஷாத் செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad