சேத்தியாத்தோப்பு அருகே பெண் படுகொலை. கணவன் தலைமறைவு போலீஸ் விசாரணை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 ஜூன், 2025

சேத்தியாத்தோப்பு அருகே பெண் படுகொலை. கணவன் தலைமறைவு போலீஸ் விசாரணை.

 கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பெரிய நெல்லிக் கொல்லை ஆசாரித் தெருவை சேர்ந்த அமுதா (50). இவரின் கணவரான அண்ணாதுரை (55) இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் ஒரு ஆண்பிள்ளை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், தற்போது ஒருபெண் பிள்ளை மற்றும் ஆண் பிள்ளைக்கு திருமணம் முடித்துள்ளனர். இந்நிலையில் குள்ளஞ்சாவடியில் இருந்து தனது சொந்த ஊருக்கு ஆட்டோவில் வயதானப் பெண்மணி ஒருவரை அமுதாஅழைத்து வந்தார்.  திடீரென காலை சுமார் 10 மணியளவில் அமுதா தனது வீட்டின் பின்பக்கம் குப்பை மேட்டில் கூர்மையான ஆயுதத்தால் முகம், கழுத்தில், கையில் குத்தப்பட்டு முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதன் பின்னர் கொலை செய்ததாகக் கூறப்படும் அமுதாவின் கணவர் அண்ணாதுரை தலைமறைவாகி யுள்ளார். இந்நிலையில் உடலை கைப்பற்றிய சேத்தியாத்தோப்பு போலீசார்  இக் கொலைக்குகுடும்பத் தகராறு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad