கடலூர் மாவட்டம் மருதூரில்3.50 கோடி மதிப்பில் வள்ளலார் அவதார இல்லத்திற்கு பூமி பூஜை போடப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 ஜூன், 2025

கடலூர் மாவட்டம் மருதூரில்3.50 கோடி மதிப்பில் வள்ளலார் அவதார இல்லத்திற்கு பூமி பூஜை போடப்பட்டது.

கடலூர் மாவட்டம்புவனகிரி அருகே  வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று உலகிற்கு  ஜீவகாருண்யத்தை போதித்த வடலூர்ராமலிங்க  வள்ளலார் பிறந்த மருதூரில் ரூபாய் 3.50 கோடி மதிப்பீட்டில் அவரது இல்லத்தை புதுப்பிப்பதற்காக பூமி பூஜை போடப்பட்டுள்ளது. அவரது இல்லம் பல ஆண்டுகளாக இப்பகுதியில் செயல்பட்டு வெளி மாநில,மாவட்ட பக்தர்கள் நாள்தோறும் வந்து வழிபாடு செய்து வந்த நிலையில் தமிழக அரசு  3.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து  புதிய இல்லம் கட்டும் பணிக்கான பூமி பூஜை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மாண்புமிகுமு.க.ஸ்டாலின் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட இந்து சமய  அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் ஜோதி தலைமையில் திருஅருட்பா பாராயணம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாட்டுடன் பூமி பூஜைக்கான கல் எடுத்து வைக்கப்பட்டது. இதில் மருதூரைச் சேர்ந்தமுன்னாள் எம்எல்ஏவும் முன்னாள் அரசு கொறடாவுமான மருதூர் ராமலிங்கம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் மருதூர் மற்றும் அதன் அருகில் உள்ள கிராமத்தினர்கள் என பலரும் பங்கேற்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad