குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் நா. இராஜவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உதவி தலைமை ஆசிரியர் இரா. பெரியார்செல்வம் அவர்கள் முன்னிலை வகித்தார். குறிஞ்சிப்பாடி உதவி காவல் ஆய்வாளர் பெ. கணபதி மற்றும் வடலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் திரு. கோ. பழனி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும், இருவரும் மாணவர்களுக்கு படிக்கும் பருவத்தில் படிப்பதைவிட்டு விட்டு வேலைக்குச் சென்றால் எவ்வளவு எதிர் காலத்தின் பாதிப்பு இருக்கும் என்பதை உணர்த்தி பல்வேறு அறிவுரைகள் எடுத்து கூறினார்கள். இதில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ர. விஸ்வநாதன் அவர்கள் வெகு சிறப்பாக நிகழ்வை ஏற்பாடு செய்தார். மேலும், அனைத்து ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக