திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி படுகொலை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 25 ஜூன், 2025

திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி படுகொலை



திருப்பூர் குமாரானந்தபுரம் காமராஜர் வீதில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 30) இவர் இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு வழக்கறிஞர் பிரிவு ஒன்றிய தலைவர் பதவி வகித்து வருகிறார். அப்பகுதியில் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் நேற்று இரவு 12 மணிக்கு வீட்டை விட்டு சென்ற பாலமுருகன் வீடு திரும்பவில்லை. 


இன்று அதிகாலை பாலமுருகன் வசித்து வரும் காமராஜர் வீதியில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அதிகாலை சுமார் 4 மணிக்கு மூன்று பேர் கொண்ட கும்பல் பாலமுருகனை "அவர் வசிக்கும் அதே வீதியில் வெட்டி சரமாரியாக  வெட்டி கொலை" செய்து விட்டு அங்கிருந்து சென்றது தெரியவந்தது. கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் திருப்பூர் மாநகர் காவல் வடக்கு துணை ஆணையர் பிரவின் கவுதம் IPS , வடக்கு காவல் உதவி ஆணையர் வசந்த் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad