உதகையிலுள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சனிக்கிழமை குறைந்து காணப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 ஜூன், 2025

உதகையிலுள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சனிக்கிழமை குறைந்து காணப்பட்டது.


உதகையிலுள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சனிக்கிழமை குறைந்து காணப்பட்டது.


உதகை தாவரவியல் பூங்காவில் குறைந்த அளவே காணப்பட்ட சுற்றுலாப் பயணிகள்.


நீலகிரி மாவட்டத்துக்கு ஜூன் 14, 15-ஆம் தேதி அதி கனமழை (ரெட் அலா்ட்) பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த காரணத்தால், உதகையிலுள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சனிக்கிழமை குறைந்து காணப்பட்டது.


நீலகிரி மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் அதி கனமழைக்கான ரெட் அலா்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது.


வழக்கமாக வார இறுதி நாள்களில் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் நிலையில், ரெட் அலா்ட் அறிவிப்பின் காரணமாக


உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, ஆறாவது மெயில் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும்  குறைந்து காணப்பட்டது.


ரெட் அலா்ட் எச்சரிக்கை காரணமாக பல தங்கும் விடுதிகளின் முன்பதிவு ரத்து செய்ததாலும், உணவகங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தே காணப்பட்டதாலும், சுற்றுலாத் தொழிலை நம்பி இருந்த வியாபாரிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனா்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad